• Recent posts

    திருக்கோயில் வலப்பா - கோபுரம்

    நற்றமிழர் தம்திறன் தாங்கியே நின்றிடும்
    உற்றதோர் சின்னமாம் வேளாண்மை மேலென
    கற்பித்து தன்மேல் விதைகாத்து நின்றிடும்
    மற்றொரு ஈடிலா நற்புகழ்  - கொண்டுநம்
    சிற்றறி விற்கெட்டா பேரறம் சொல்லிடும்
    கற்பனைக் கெல்லாம் கவின்மிகு சாட்சியாய்
    சொற்பனைக் கீடாய் நிமிர்ந்து இருக்கின்ற
    சிற்பத்தின் காட்சியென நற்றெழில் - பீடுடை
    பொற்கிணையாய் நாளும் வரலாறை தாங்கியும்
    அற்புதங்மாய் ஆயிர மாயகதை கூறிடும்
    கற்றவர் தாமனுதி னம்போற்றும் பேரெழிற்
    பெற்றதெம் கோபுரத்தை காண்.

    #கோபுரம் #ஒருவிகற்ப_பஃறொடைவெண்பா.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728