• Recent posts

    திருக்கோயில் வலப்பா - பலிபீடம்

    நாம்கொண்ட தீதெல்லாம் வார்செய் தருளுமே
    நாம்கொண்ட நன்றெல்லாம் ஓர்மம் படுத்துமே
    நாம்வணங்கும் அப்பலி பீடமதும் நன்மைதரும்
    நாம்வணங்க நல்குமே நன்றை - தினமுமே
    வானூறு கிங்கரர் தாமிறங்கி பற்றுவர்
    தானூறு தீமையை தள்ளிநினை காத்திட்டு
    வானூறும் தம்பணிக்கு தான்திரும்பு வர்நீரும்
    வானூறுங் காலமதில் வந்து - உதவுவர்
    விண்தேவர் வந்துமக்கு காவலிருப் பர்நாளும்
    மண்போற்றும் நற்புகழ் தன்னை வழங்குவர்
    கண்போன்று காப்பர் கலியுகத்தே நீருமே
    விண்ணோங்க வாழ்த்துவர் பார்.



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728