• Recent posts

    திருத்தாள்சேர் பதிகம்

    1-ஞாழல் சூடனையான் ஞாதல் எங்கனமே
    தாழவே வாழும்யான் தாள்சேர்தல் எங்கனமே
    சூழமை கங்கைகொண்ட சூரிய முக்கண்காண்
    வாழதை யான்பெரும் வார்த்தைசொல் வான்பிறையே
    - கலிவிருத்தம்.

    2-பவ்வம் கடைந்த பகைவர் இருவரின்
    எவ்வம் துடைத்திட எம்மீசர் வந்ததுபோல்
    அவ்வம் கலைந்தே அடியேன் கரைசேர
    மௌவ்வம் சூடன்தான் சொல்வழிசொல் வான்பிறையே

    3-கண்டம் படைத்தே கனகம் படைத்தோன்
    கண்டம் பிறந்தே கடந்தே தடஞ்சேர்
    பிண்ட மெனையே பிறப்பறுக் குந்தலைவன்
    அண்ட மானவனடை அவ்வழிசொல் வான்பிறையே

    4-கூந்தலை குன்றாக்கி கூற்றவன் போலாகி
    தந்தலை தன்னிலே தண்ணீரை ஏந்திடு
    எந்தலை வன்தாள் எனைபுகும் வித்தையை
    எந்தளை யுமின்றி உரைத்திடு வான்பிறையே.

    5-வெண்பொடி பூசலான் தந்நீல கண்டமும்
    தண்கருணை தன்னருள் தயாளன் பரமனின்
    வெண்ணிற மேனியு முடனுறை தையலும்
    வெண்பனி மாமலை சேர்வழிசொல் வான்பிறையே.

    6-கண்தான் கொடுத்தே பரந்தாமன் போற்றிடும்
    கண்ணன் தினமுமே கண்ணாய் போற்றிடும்
    கண்ணதை கொடுத்த கண்ணப்பன் போற்றிடும்
    எண்குணத் தனையான் அடைமுறைசொல் வான்பிறையே.

    7- செந்தழல் போலொரு செம்மையை கண்டிட
    வெந்தழல் கொண்டவன் வெய்யோனாய் நின்றிட
    அந்தழல் தன்னையே அடியவன் சேர்ந்திட
    வந்திங்கு ரைப்பாய் முடியுறை வான்பிறையே

    8- சங்கத் தமிழ்கண்ட சங்கரன் தன்னையே
    அங்கம் பொடிபூசும் அரணடி போற்றியே
    செங்க மலர்பாதம் சென்றுயான் சேரவே
    வங்க கடலேறி வழிசொல்வாய் வான்பிறையே.

    9- முத்தம் முதலானோன் முந்தைப் பெருளானோன்
         நித்தம் தொழுதேத்தி நிமலனெனை காத்திட்ட
         சித்தன் சிவனடிக்கே சிவத்தொண்டு செய்தாற்றி
       அத்தன் அவனை அடைவழிசொல் வான்பிறையே.

    10- அன்றைப் படைத்திட்டு அங்கங் காத்திட
          நன்றென் பொலிசையினை நல்வழி நீக்கிட
           தென்றல் சுகமனைதாய் தென்னவன் தாள்சேர
            நன்காய் பதிலுரைப்பாய் நல்வழியை வான்பிறையே
         

    ஞாழல்  - கொன்றை மலர்
    ஞாதல் - காண்பது / காணுதல்
    பொலிசை - கடன்
    பவ்வம் - கடல்
    எவ்வம் - துயர்
    அவ்வம் - ஆசை
    மௌவ்வம்- மல்லிகை

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728