• Recent posts

    காதல் கலிவிருத்தம்

    மையல்கொண்ட என்மன மதனத்தின் வதனமே
    தையலென்று என்மண மேடை அமர்ந்து
    வையம்புகழ நல்வாழ்வை எய்திட செய்திடும்
    நேயத்துணை நின்றன் நல்மனம் வாழி.

    - கலிவிருத்தம்.

    கயல்விழிக்கு மீனிரண்டு களவானதோ வேலென்பதோ
    அயல்வெளிக்கு சென்றுவர ஆனவை செய்திடும்
    முயல்மார்பிடம் மந்திரமோ முன்னை தந்திரமோ
    செயல்படா தென்றிடப் பெண்ணியம் வாழி.
    -கலிவிருத்தம்

    தழல்வீழ் உமியென தனிமைநீங்கி சரண்புக
    கழலதை காட்சிசெய் கன்னியே நின்றன்
    குழல்விரி காடதில் குன்றிகுழைத்  தென்னைவிட்டு
    மழலையாய் மாறினேன் மங்களமே வாழி
    -கலிவிருத்தம்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728