• Recent posts

    பிரம்மாஸ்திரம்

    பிரம்மாஸ்திரம்

    துன்பங்கள்  என்னை;
    வாட்டிடும்  போது  கவசமாய்
    ஒரு  பிரம்மாஸ்திரம்!

    துன்புறுதியவர் எனைக்கண்டு
    துவண்டு விடும் கேடயமாய்;
    ஒரு பிரம்மாஸ்திரம்!

    நண்பர்களின் தோழமைக்கும்;
    தேவைக்கும்  உற்சாகமாய்;
    ஒரு பிரம்மாஸ்திரம்!

    எதிர்வரும் தோல்விக்கும்;
    தோல்வியின் காரணிக்கும்;
    ஒரு பிரம்மாஸ்திரம்!

    விஸ்வரூபம் விடுத்து;
     வீழ்ந்தபோதிலும் தூண்டுதலாய்;
    ஒரு பிரம்மாஸ்திரம்!

    எண்ணியதை சூசகமாய்;
    செய்திடும்  ஆயுதமாய்;
    ஒரு பிரம்மாஸ்திரம்!

    எப்படியும் என்நிலை;
    பிறழா   நெறிக்காய்;
    ஒரு பிரம்மாஸ்திரம்!


    எத்துயர்வரினும் ஏற்றம்யென;
    பொருத்திட எனக்காய்;
    ஒரு  பிரம்மாஸ்திரம்!

    அன்பின் வாசாலாய்;
    இன்பத்தின்  வாசனையாய்;
    ஒரு ப்ரம்மஸ்திரம்!

    அலங்கார சூத்திரமாய்;
    அவசிய சூட்சமமாய்;
    ஒரு பிரம்மாஸ்திரம்!

    நகைப் போன்றதாய்;
    நகை போன்றதாய்;
    ஒரு  பிரம்மாஸ்திரம்!

    இத்துணையிலும்    வெளிவரும்;
    என்சிறு  புன்னகையே;
    ஒரு பிரம்மாஸ்திரம்!

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728