• Recent posts

    கண்ணீரே தேங்கி இரு!

    கண்ணீரே கண்ணீரே இனி எனும் விழாதே!

    விலகும் காதல் கண்டு விழாதே!
    பிரியும் உயிரை கண்டு விழாதே!

    இன்பத்தின் உச்சியும் கண்டு விடாதே!
    கண்டு உகந்தாலும் கனிந்து விழாதே!

    துன்பத்தில் துயிளின்றி துவண்டு விழாதே!

    கண்ணீரே இனி நீயும் கௌரவம் பார்க்கும் காலம் இது

    கண்ணெதிரே நடக்கும் எதற்கும் நீ விழாதே!


    நீ உறையும்  கண்ணீர்க்கும் துன்பம் வரலாம்!

    அப்போது கூட கண்ணியம் காக்க விழாதே!

    என்னவென்றாலும் எதுவென்றாலும் தவறி கூட விழாதே!

    காத்திரு கண்ணீரே நீ விழும் காலம் தூரமில்லை,!
     அப்படி ஒரு நிலை நிஜமாக தாயாராய் இருக்கிறதுஅதுவரை தேங்கி இரு!

    கண்ணீரே தேங்கி இரு!

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728