• Recent posts

    தமிழ்தந்த வரம்

    பேச்சிடையில் பேரிளம்பெண்  எம்தமிழன்னை கேட்கிறாள் - பிள்ளாய்
    உனக்கேதும் பேராசையுண்டோ ?

    ஏனம்மா? எதற்கிக் கேள்வி? - சேயோய்
    வள்ளுவனைக் கேட்டேன் பாரதியை கேட்டேன் - யாதுரைத்தாரம்மா
    .

    தாயிடம் கேட்காமல் இருப்பாரோ? - தீக்கனலோன்.
    தம்கவிக்கு சாகாவரங் கேட்டான்  - அக்கிழவனோ
    வையத்தையே தனக்கு கேட்டான்  - நீயும்கேள்.

    யான்வேண்டுவது இருக்கட்டும் -- நீதந்தாயோ.?
    நான் தாயன்றோ தமிழன்றோ - தந்தேன்.
    வையம் கேட்டோனை வையத்திற்கு தந்தேன்
    வரங்கேட்டோன் தன்கவியை யானேகாத்தேன். - உனக்கென்
    வேண்டும்கேள் மைந்தோய்..

    பேராசை எதுவாயினும் - தருவாயோ
    பேருடை மொழியே - தந்தேனே
    நின்னாசை கடினமோ? - கேள்..

    என்னாசை ஒன்றே - தாயே
    என்னுயிர் பிரிங்கால் - உலகெல்லாம்
    என்னை வெறுப்பினும் - தாயே
    நின்சேய் யானெனக் - கனிந்து
    எனையும் பழித்தோர் பிறமொழிப் பிள்ளையோர்
    பொறாமைகொள்ள நின்மடி சுமந்து
    புகழுடை மரணமதை எனக்கீதல் வேண்டினேன்..

    மொழிகளையே பெற்ற கர்வத்தோள்- யானுமே
    நின்னை பெற்றதோர் பெருங்கர்வமடா - பிள்ளோய்
    மரணங்களில் புகழுடையோர் சிலரே - அவற்றுள்
    தலையாய புகழ்பெறுவாய் - நின்பிரிவில்
    தமிழழுதாள் என்றபுகழுருவாய்.. ஈந்தேன்
    யானும் மாந்தர் யாவரும் வெறுத்துனை - ஒதுக்கினும்
    அன்னையானுனை காப்பேன் - அதற்காய்
    யான்சேர்த்த தர்மமனைத்தும் இழந்தினும் - சிறப்பெனக்
    கொள்வேன் கூற்றுவன் வந்தெனைப் - பணிவான்
    நினைபெற என்னனுமதி வேண்டுதல் வேண்டும்..

    வாழ்வுள்ளவரை நற்றமிழ் நாவுர - துணையிருப்பேன்.
    வாய்ப்புகள் யாவும் நானே வழங்குவேன்...
    ஈசனே வந்தழிக்க வந்தாலும் எதிர்நின்றுகாப்பேன்
    இத்தென் வாக்கு என்றள் என்னன்னை..

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728