• Recent posts

    சாட்டிலைட் கவிதைகள் : எனக்கென யாருண்டு

    எனக்கென யாருண்டு என் காதலே
    நட்சத்திரத்தை காதலிக்க கூடாதென்றே - என் இதயத்தை
    உனக்குள் வைத்துவிட்டு வந்தேன்எங்கேயோ....

    நிலவிடம் மயங்கிட கூடாதே என்று - அதன்
    பக்கம் கூட திரும்பாமல் நின்றேன்...

    பகலிரவு இல்லா பாரண்டத்தில் - நானோ
    பார்ப்பதெல்லாம்  உனைமட்டும் தான் பறவையே...

    சிறகின்றி பறக்கிறாய் பம்பரமாய் சுழல்கிறாய்  - எத்துனைமுறை
    துளைத்தாலும் சிரமம்காட்டாமல் சிரிக்கிறாய்...

    ஒன்றறிவேன் உன் சூரியக்குடும்பத்தை  எதிர்க்கும் - திராணியுமில்லை
    திறனுமில்லை என்றாலும் வெல்வேன் ஒருநாள்...

    பொறுமையென்ன உன்தாய் வீட்டு சீதனமோ __ எப்போதும்
    தவிகர்க்காமல் காத்திருக்கிறாய் பொறுமையாக..

    எத்தனை நாள் என்றுதெரியாது என்நன்றிக்கடன் தீர  - அதுவரை
    எப்படியாவது காத்திரு வருவேன் நான் என்றாவது....

    எதிர்கால சங்கிலியில் காலநதியில் நாம் - வரலாற்றில்
    ஒருபுதிய வார்ப்பினை வார்த்தெடுக்கவேண்டும் எனக்காக...

    1 comment:

    1. The King Casino | Review of Casino | RTP - Joker
      The king casino review https://jancasino.com/review/merit-casino/ - https://septcasino.com/review/merit-casino/ everything you need to titanium ring know about this popular novcasino casino. communitykhabar It's all about quality and quantity.

      ReplyDelete

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728