• Recent posts

    எழுதபடாத கவிதைகள் -10: பிறந்தநாள் விழுதுகள்

    முடிச்சு முடிச்சாய் ஆசைகள் - சேர்த்துகட்டிய
    தோரணமாய் ஆசிகள்...
    இன்னும் இன்னும் கிளைக்கும் இன்பங்கள் - ஒன்றுகூடி
    மூழ்கடிக்கும் வாழ்த்துக்கள்...
    கூடிக்கொண்டே போகும் சுற்றங்கள் - இந்நாளில்
    தூக்கிக்கொண்டு ஓடும் நல்லெண்ணங்கள்...
    தூரத்து சொந்த மேகங்கள் - பொழிந்ததை
    பிடிமான வேர்கள் பிடித்துக்கொடுக்க...
    தூவியதெல்லாம் ஆசிகளே - மணமக்கள்
    மேல்விழும் அர்சதை மழைகளே....


    மேலே விழுந்தாலும் விழாவிடினும் - வேர்கள்
    மேலே கொண்டுசேர்க்கும்...
    ஒவ்வொரு பிறந்த நாளும் - புதுமரம்
    வாழ்த்துக்கள் யாவும் விழுதுகள்....
    கனவுகள்  மட்டுமல்ல ஊக்கமருந்துகள்  - இதுபோன்ற
    ஆசையான ஆசிகளும் வெற்றிக்கு ஏறச்செய்யும் விழுதுகள்...
    வேர்கள் மட்டுமல்ல விழுதுகள் கூட பலம்தான்....

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728