• Recent posts

    எழுதப்படாத கவிதைகள் -2: ஞான பிரச்சார யத்

    எழுதப்படாத கவிதைகள் -2: 

    ஞான பிரச்சார யத்





    பிரளயம் பெற்ற பிரபஞ்சத்தில்
    பிரியம் பெற்ற மனிதனே   - கேள்

    நம்மிடையில் ஏழுமை மிகுதியாம்
    கடல் ஏழு கண்டம் ஏழு கிரகமும் ஏழெ!

    ஏழ்கிரகத்தின் ஒருமையே நாமாகிறோம்
    இந்திரியங்கள் ஏழு நம்மில்உண்டாம்!   - கேள்


    நமக்குள் ஐந்தும் மிகுதியாம்
    பூதமைந்து பொருளைந்து பூமியும் ஐந்தே!

    பூதமைந்தும் பொருளியணத்தே மனிதஉடலாம்
    பொருளைந்தும் பொருந்திய உடலும் நமதே!  - கேள்

    நம்மில் நுன்மங்கள் பலவாம்
    நாற்கோடி நுன்மங்கள் நாமாம்!

    நுன்மதின் நுட்பமே செயலாம்
    செயலும் நுட்பமே நிகழ்வாம்!  - கேள்

    பிறந்த நீயும் பிரபஞ்சமே
    அதிர்வினில் நீயும் சூட்சமமே!

    உன்னை அறிவதே உலகம்
    உண்மை அறிவதே ஞானம்!  - ஞான பிரச்சார யத்

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728