• Recent posts

    "எச்சரிக்கை"

    "எச்சரிக்கை"

    ஆசைகளை அவசரமாய் அனுபவித்துவிடு!
    கனவுகளை உடனடியாய் நிறைவேற்றிவிடு!
    அடுத்தவர்க்கும் முடிந்தவரை வழிவிடு!
    அவரும் அவைகளை தீர்த்துவிடட்டும்!



    தேக இச்சைகளை தேவைபடி தீர்த்துக்கொள்!
    தாக பசிகளுக்கு முடிந்தவரை தின்றுகொள்!
    காதலை இன்றே சொல்லிவிடு!
    கற்பனைகளை இப்போதே எழுதிவிடு!


    அவசியங்களை செய்துகொள்!
    அலுவல்களை  முடித்துக்கொள்!
    புசிப்பவற்றை  ருசித்துக்கொள்!
    அழகுகளை ரசித்துக்கொள்!


    செய்த பாவங்களை கணித்து வை!
    பிறரை ஏற்று மன்னித்து வை!
    உரியபடி தர்மம் செய்து வை!
    கொஞ்சமாவது புண்ணியம் சேர்த்து வை!


    முதுகெலும்பு உள்ளவை முடிந்து கொண்டிருக்கின்றன!
    புவியும் கூட புதுயுகம்நோக்கி ஆயத்தமாகி கொண்டிருக்கிறது!




    உயிரினத்தின் உச்சம் நீயன்றோ!
    ஒருதுளி மிச்சமின்றி முடிவது;
    விரைவில் நிச்சயம் என்றறிவாயோ!

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728