• Recent posts

    நமசிவாய - வெளிவிருத்தம்

    நயனம் விரும்பும் நயமுற ஆடிடும் - நடனரசே
    நவதுளை மேனியிற் நடமிடும் நாதன் - நடனரசே
    நஞ்சுண் டமரர் நலம்பெற செய்த - நடனரசே
    நம்மை புரிகும் நல்லோன் நீயே - நடனரசே.

    மயங்கும் நல்லிசை மனிதசாம் பல்பூசும் - மங்களமே
    மனதில் நிலைகொள் மழுவதை ஏந்திடம் - மங்களமே
    மருவும் மாறாதும் மந்திரத்தில் உறையும் - மங்களமே
    மகிமை நிறைந்த மகேசன் அம்மையொடு - மங்களமே..

    சிரசில் கங்கை சிவமே சுயம்பாய் - சிவபரமே
    சிந்தை தனிலுள் சிறப்புற் றமுதே - சிவபரமே
    சிகையிற் பிறையும் சிகரமதி லுறையும் - சிவபரமே
    சிற்றம் பலமே சிவனடி யார்க்கு - சிவபரமே.

    வாசியாய் வந்தெம்முள் வாசம் புரியும் - வாசியமே
    வாழுமுறை தந்தாடும் வாயுலிங் கமாயனே - வாசியமே
    வாதவூர் அடியனுக்கு வாரியருள் தந்திட்ட - வாசியமே
    வாசம்செய் யும்இசை வாசிப்பின் நேசனே -வாசியமே.

    யாழிசை விரும்பும் யாம்பாட கேட்கும் - யாவுமாயுள்
    யாசித்தும் அடியவர்  யாரும் துன்புறாது - யாவுமாயுள்
    யாக்கை உடைதலை யாயெனுள் உறைந்திடும் - யாவுமாயுள்
    யாண்டும் இடும்பை யானும் கடந்திடவே - யாவுமாயுள்.

    பஞ்சாட்சரனுக்கு ஜந்து சீருள வெளிவிருத்தம் ஐந்து பாக்களுடன்  பாவென்றின் முதலெழுத்தை சீராக கொண்டு நமசிவாயா என்று வரும்படி அமைத்தது.. நம இசையாகும் சி சப்தமிழந்து வாயா இசையாகும். ஆகவே சி பாவில் இசையிலாது அமைத்தேன்..

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728