• Recent posts

    அமைதி

    அரிய மூலிகைகளும் செடிவகைகளும்
    அரிய மரங்களும் பறவைகளும்
    அறிய கொடுத்து அள்ளித்தந்த
    அரணாய் பொன்முட்டையிட்ட
    மலைகளை சுரண்டித் தீருங்கள்..

    குயில்கள் குழாவும் குருவிகள் கொஞ்சும்
    எஞ்சியுள்ள நன் மரங்கள் நிறைந்த
    காடுகளை சென்று சூறையாடுங்கள்.

    குண்டு மழைகள் பொழிந்து பள்ளியில்
    பிஞ்சு மழலைகளின் எதிர்காலம் அதனை
    கொன்று பறித்துக்கொள்ளுங்கள்..

    மிருகங்களை வகைவகையாய்
    ரசித்து சமைத்து ருசித்து
    தின்று புறந்தள்ளிவிட்டு கழிவென்று ஒதுங்கிவிடுங்கள்

    எஞ்சிய சகமான நல்ல மனிதர்களை
    மலங்கள் நிறைந்த சாக்கடை குளத்தில்
    ஆழ்த்தி ஆனந்தம் காணுங்கள் பின்னே
    மூழ்த்தி மூச்சினை பறித்து சுவாசக் காற்றை சேமியுங்கள்..

    யாவரையும் அழித்து அவர்தம் பங்குக்கெல்லாம்
    யாவற்றையும் பெறுங்கள் பணத்தை அடுக்கி
    அதில் குடியமருங்கள் குடித்து கூத்தாடுங்கள்.

    யாவுமே போகட்டும் உங்கள் கல்லாபத்திரம்
    யாவுமே அழியட்டும் உங்கள் பணங்கள்பத்திரம்.
    யாவுமே ஒழியட்டும் அதனை லாபமாக்குங்கள்
    யாவுமே அற்றுபோகும்படி பூமியை சுத்தப்படுத்துங்கள்

    பின்னே...

    அமைதி அமைதி அமைதியோ அமைதியென
    சின்சான் போல்  கூறிக்கொண்டே இருங்கள்
    உங்கள் இருப்பு இயற்கைக்கு புலப்படட்டும்...

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728