• Recent posts

    உலக தாய்மொழி தினத்தன்று.. தமிழ்வணக்கம்

    கோடியகவைப் பலகண்டு - தம்மக்கள்
    கோடிகணக்கை அறியாது  - தேனுண்ணும்
    தேனியிற்கு மலராகி - மொழியுண்ணும்
    நேசருக்கு அழுதாகி - புனையும்
    கவிஞருக்கு சொல்லாகி - வணங்கும்
    அன்பர்க்கு தாயாகி - பிள்ளையுடன்
    விளையாடும் சேயாகி - இடிந்துரைக்கும்
    வீரத்தின் தேவி - அறிவுருத்தும்
    ஈரத்தின் ஆவி - உலகத்தே
    இன்னுயிர்  யாவும் - நின்னுயிராக
    மண்ணிருந்தே விண்வளர்ந்த - தாயே

    முக்கண் ஈசனையும் முப்பால் குறலோனையும்
    முப்புறமும் தந்தாயே   - எங்கள்
    கற்பனைக்கு சொற்புனைந்து அற்பனுக்கும் ஆற்றலிட்ட
    அன்னை உருவாக - நிதம்
    இவ்வுலகம் கண்டுயர இன்னும்பல அற்புதத்தின்
    ஆதியென நின்றாயே - கடல்
    தின்றுபசி கொன்றபின்னும் வென்றுநினை விழுங்கியனும்
    வேர்பிடித்து வந்தாயே - மலர்
    கொன்றையோனும் கொற்றவையும் காவலென கொண்டிருந்தும்
    கொள்கைகொடி தந்தவளே ..- எம்தமிழே

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728