• Recent posts

    கலிவெண்பா

    ஏற்காடு சாரலில் ஏதேதோ கற்பனைகள்
    ஏற்றாலும் என்னுள்ளே வெற்றிடமே - ஏற்றதென.
    ஏற்பதெல்லாம் ஏனோயிங் கேறாதே நிற்பதால்
    ஏற்றயிறக் கம்போல மாறிடுதே.  - ஏற்பதோ
    கற்பதோ எல்லாம் கரைந்து வழிகிறதே
    நிற்பதோ என்னுள் நிலையின்றி  - போற்றனைய
    யாவும் பயனின்றி யானும் பயனிலாது
    சாவும் நிலையொன்றை செய்கிறதே - தாவும்
    குரங்கெனவே கூத்தாடி காலமதை போக்கவோ
    கூரறிவை யான்பெறவே தானிலையே - சூரனோ
    வாரனோ யாதென நல்குவேன் யானெனை
    வீரமோ வாய்க்கலை வீணெனவே  - தீரனென்
    வாள்வழுக்க தீரஞ்சொல் வாய்வழுக்க நானெனை
    வாள்கொண்டு வீழ்த்தலை யே

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728