• Recent posts

    கல்வி

    புத்தகம் நாளும் படி
    புகழ்பெற அது உயர்வு படி.

    பார் பக்கங்களை புரட்டிபார்
    பார்க்கும் உன்னை புரட்டுவதை பார்.

    வரலாற்றை படி
    எதிர்காலத்தை படி
    நிகழ்காலத்தை அதன்படி
    நேர்த்தியாய் நிகழ்த்தி பிடி.

    நூலாடை மானம் காப்பது போல்
    நூல்கூட மானங் காக்கும்

    உற்ற உயிர் நண்பன் போல
    ஒற்றை புத்தகம் உன்னை திருத்தும்.

    நெற்றி கதவு திறக்க நூலது சாவி
    கற்ற கல்வி சிறக்க நீயதை போதி.

    தலையணை போல புத்தகம் தனை மயக்கும்
    தலைக்கணம் இல்லாதது உனை வளர்க்கும்

    உத்தமனாய் நீமாற உன்வாழ்வில் உறுதுணையாம் புத்தகம்.
    வித்தகனாய் நீயாக கற்றுத்தரும் வியாசனாம் புத்தகம்.

    உலகெலாம் உற்றுபார் உயர்ந்தோரதில் கற்றோர்தான்.
    ஞாலமெலாம் சுற்றிபார் ஞானமதில்  கற்றல்தான்.

    அறிவிற்கும் ஆற்றலுக்கும் துண்டுதல் கல்வி - அதுபோல்
    அடுத்தவர் அனுபவம் உனக்கூற்றுதல் கல்வி..

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728