• Recent posts

    கவியரங்கம் போகத்தான்

    ஆகமங்கள் எதற்கு?
    அவதார புருசர்கள் எதற்கு?
    வேதநற்பூநூலர்களே...

    ஆண்டவனெனும் இறைவனெதற்கு?
    அன்னையும் பரன்பரையும் இருக்க
    அத்துனை உயர்ந்த இறைவனெதற்கு?..

    ஜாதகங்கள் எதற்கு?
    சாதிக்க பிறந்தோரே உமக்கு..
    சாதிகள் எதற்கு?
    சாமர சந்ததிகளும் எதற்கு?..

    ஆதாமின் தலைமுறையோ?
    தம்மனமிசையாடும் குரங்கின வாரிசோ?
    வாலில்லையே ? வெவ்வேறு இடமாகிறோமே
    தாழில்லா பூமியை தகர்ப்பது எதற்கு?

    அணுவின் பரிமாணங்களே ஏன்?
    இந்த அணுவாயுத போர்கள்? கேட்டால்
    அடுத்த கட்டமாய் கிருமிகளாமே?
    எதற்கிந்த சூறையாடும் யுத்தங்கள்?..

    தாழ்த்தபட்டோம் என்கிறாயே?
    எவ்வித ஊனமுனக்கு?
    இறந்தகாலத்தை காட்டி ஏன்?
    இன்று லாபம் பார்க்கிறாய்?..

    ஆரோக்கிய ஆண்டவர்களே ஏன்?
    ஆரோய்க்கியத்தை நீங்கள் முடிவுசெய்கிறீர்கள்?
    ஆதாயம் தேடத்தானே - குறைந்தபட்சம்.
    அவமானபடுத்து சிறப்பை எய்துவதிலாவது?..

    பெறுவணிகர்களே ஏனிந்த இரக்கமற்ற செயல்?
    பொருள்தேட பெருங்குற்றமதை எளியதாக்குகிறீர்களே?
    இனாம் என்ற ஒன்றை
    இந்தியாவின் அடையாளமாக மாற்றுகிறீர்களே?...

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728