• Recent posts

    வருக புத்தாண்டே 2017..

    வருகவருக புத்தாண்டே  2017லே
    காலத்தின் புதையலே 2017லே

    என் சோகம் மறந்தேன்
    ஒரு குழந்தை போல் மாறினேன்
    ஒரு குழலிசை போல வா

    இயற்கை வஞ்சிக்காது மழை தரவா
    புயல் வேண்டாம் தென்றல் வீசவா
    இனி ஒருதுளி கண்ணீர் விழாது காக்கவா
    விழுந்தாலும் அது ஆனந்த கண்ணீராய் மாற்றவா

    எம்மக்கள் பாவம் தீரவா - இனி
    எப்போதும் பாவம் செய்யாதிருக்க வா
    காற்று மண்டலம் எங்கும் புத்துணர்வை ஊற்றிவா
    ஊக்குவிக்கும் பேறாற்றலாய் வா

    தன் மனம் விரும்பும் போதே மரணம் தரவா
    அதுவரை அகிலத்தில் மரணம் இல்லாது காத்துவா.
    வா வரவேற்கிறேன் வா

    என் வரவேற்பை ஏற்கவா.
    ஆகாயமெங்கும் மேகத்தால் தோரணம் கட்டி
    ஆங்காங்கே மழையில் தோய்த பன்னீர் தூவி
    இடையேஇடையே மின்னல்களை ஔிரவிட்டு
    தெருவெங்கும் தென்றல் நிரப்பி 
    வரவேற்கிறேன் உன்னை வா

    என் டைம் மிஷினில் சிறப்பான காலமாய் குறித்துவைக்க வா..

    என் விடியல்களை பனிதுளிகளால் அலங்கரிக்க வா...

    பூக்கள் போல மலர்ந்து புன்னகைக்க வா..

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728