• Recent posts

    எழுதபடாத கவிதைகள் - பரந்த பிரபஞ்சம்

    தூசெயென இருந்ததொன்று - தன்னைதின்று
    துளியென பிறழ்ந்து - தன்னுள் உதிர்ந்து
    தூணென பெரிந்து - தன்னால் உடைந்து
    தூசென இருந்ததென்னே!!?

    ஒன்றிலாது ஒன்றென்றாகி - யுகயுகமாய்
    ஒன்றிணைந்து ஒன்றிலாதாகி - புதுபுதிதாய்
    ஒன்றிழந்து ஒவ்வொன்றாய் - விதவிதமாய்
    ஒருமித்த ஒன்றானதென்னே!!?

    தானின்றி தன்னிலியங்கி - வானிலாது போல்
    தானில்லா தனையில்லா - கோனென
    தனையறிந்து தனைபிரிந்து - வேறென
    தனைபெற்று தனையறுத்ததென்னே!!?

    காலமில்லா காலத்தே - பிறந்து
    காலமில்லா காலத்தே - இறந்து
    காலமென்றே காலத்தை - பெற்று
    காலமெல்லாம் காலமானதென்னே!!?

    தானேபிறந்து தனைபடைத்து - நாமறியும்
    வானேஅளந்தும் அளவிலாதுடைத்து - நாமென
    நாமேயென நமதென பிரிந்து - விளையாடும்
    நாமறிந்தும் அறியாதபடி
    பரந்த பிரபஞ்சம்!!!....

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728