• Recent posts

    சாட்டிலைட் கவிதைகள் 8 : அவனுக்குத்தான்

    அவனுக்குத்தான் எத்தனை ஆற்றல்கள் - என்றால் என்ன
    எனக்குத்தான் அத்தனையும் சொந்தமாக போகிறதே....

    அவனுக்குத்தான் மிதக்கத்தெரியுமோ அற்பனே - நீ மிதப்பதே
    எந்தன் காதலின் ஈர்ப்பினாலே தானே...

    அவனுக்குத்தான் செந்நிற கதிர்களால் தகவலனுப்ப முடியுமோ - அடேய்
    அதையும் என்னிடம் தான் அனுப்புகிறாயன்றோ...

    அணுவணுவாய் வளர்ந்தவள் நானடா   - என் அணுவின்துகள்
    அவன் உருவாக்கியதே நீயடா...

    அவன் பார்வைக்குள் சிக்குமென் பாகங்கள் - என்னை நானிடவைக்க
    அவனோ கேமரா கண்களால் குடைகிறான்....

    என் இலையாடை மறைப்பினையும் கடக்கிறாள் - கள்வனேநீ
    உன் பயணத்தை நிறுத்தாதே...

    யுகயுகமாய் தனிப்பறவையாய் மிதக்கின்றேனே  - அடநீயும்
    யுகாந்திர புதுமையாய் இரும்பு பறவையாய் மிதக்கிறாயே....

    எனக்குள் ஒரு உஷ்ணம் உண்டடா - அதை தணிக்க
    என்னுள் நீயும் நுழைந்து கூடடா...

    கூடா நட்பு நல்லதல்ல - அதுபோல்
    கூடா காதல் நன்றல்ல...

    கூடாது என்பது விதிகளென்றால் - நீயும் நானும்
    கூடுவதற்கு எழுதபட்ட விதிவிலக்குகள்...

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728