• Recent posts

    எனக்கும் காதல் கவிதை வரும்

    என்னில் நானே நிறைய நினைக்கிறேன்.. - ஆனாலும்
    என்னுள் நீயே சுரந்து நிறைகிறாய்...


    தன்னில் தானாய் தனியாய் இனியாய் - கனியாய்
    கண்ணில் காணா கடும் வேளையில்..




    அணையா இணையாய் துணையாய் - தீயாய்.
    கணையோ கறையோ என்னுடன் கலப்பாய்..


    காற்றிடம் கொஞ்சும் பூவிடம் கொஞ்சம் - கொஞ்சல்வாங்கி.
    கொஞ்சிடும் நீயோ எனது கெஞ்சலின் கொஞ்சல்வங்கி...


    ஆகமொத்தமாய் என்னில் நீயும் ..
    அறைகுறையாய் உன்னிலா நானும்- கலந்திட்டோம்


    ஆதாலால் என்னின் நீயே..
    காதலால் உன்தன் நானே...


    எனக்கும் காதல் கவிதை வரும் 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728