• Recent posts

    எனக்கும் ஒரு கீதோபதேசம்: 1

    எனக்கும் ஒரு கீதோபதேசம்:1



    நான்:
    கண்ணா , ஏன் என்னை படைத்தாய்? 
    படைத்ததும் படைத்தாய் அறிவுடன் ஏன் படைத்தாய்?
     எக்குரையுண்டு என்னிடம் பின் ஏன் வாழ்நாள் முழுதும் தோற்கிறேன்? இத்துணை துயர் படும்படி என் பாவம் இருக்கும் இவ்வுலகில்? 
    அல்லது நான் தான் என் பாவம் செய்தேன்?



    கண்ணன் சொன்னான்:
    நண்பா! 
    ஒன்றை அறிந்துகொள் திறன்இன்றி நான் யாரையும் படைத்ததில்லை , 
    பலர் அதை பயன்படுத்துவதில்லை
     நீ பயன்படுத்தினால் அது அவர்க்கு வினோதமாய் படுகிறது...







    நான்: இருக்கட்டுமே என் திறன் பயன்பட்டும் நான் தோற்கிறேனே? மற்றோர்க்கு இழிவாய் போகிறேனே?



    கண்ணன் சொன்னான்: 

    அறிவாய் நண்பா! மற்றோர்க்காக நீ ஏன்காதே!
     இழிவாய் எண்ணினாலும் இறங்கு போகாதே!
     ஓட்ட மூங்கில் தான் காற்றை ஓசையாக்கும் !
     காலி கூடம் தான் நீர் அள்ளும்!
     எதையும் எதிர்பாராமல் உன் பயணம் போகட்டும்.
     பேசுவோர் இங்குதான் இருப்பர்.
     நீ மேலே போவாய்...

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728