• Recent posts

    நான் என்பது

    அணு உடைத்த பிரளயம் பெற்ற பிரபஞ்சம் நான்!
    ஒளி அடர்ந்த கதிரின் பழமை அறிந்தவன் நான்!
    முளைக்கும் தளிரின் புதுமை அடைந்தவன் நான்!
    பொழிகின்ற மழையின் காரணம் புரிந்தவன் நான்!
    ஒழிகிற நிலையில் உயரம் கண்டவன் நான்!
    தோல்வியின் நாயகன் நான்!
    வரும் வெற்றியின் காவலன் நான்!
    மொத்தத்தில் நான் என்னோடு சிலவற்றின் தொகுப்பு தான்!

    நான் என்பது நாற்பது பக்க கூகுள் தேடல்!

    நான் என்பது நாம் எல்லாம் ஒன்றேன்ற சுருக்கம்!

    என்னில் அடங்கியவை எண்ணில் அடங்காதவை!

    எனக்காய் அமைந்தவை ஏகத்தில் அமையாதவை!

    ஏக்கத்தில் கொஞ்சமாய் தாகத்தில் மிச்சமாய் !

    வாழ்க்கை பயணத்தில் விழியில்லாதவன் வழியில்லாதவன் நான்!

    இருளிலும் ஒளிஉண்டு இயற்கையின் சூட்சமம் அது!

    என்னிலும் சில தனித்ததிறன் உண்டு எண்மையின் சூட்சமம் இது!

    தொலைந்தாலும் பரிச்சயம் நான் !
    இருந்தாலும் அலட்சியம் நான்!

    தேடலின் நாயகன் நான் !
    எனக்காய் காத்திருக்கும் காலம் தான்!

    அந்நாளை தேடியே நகரும் நாழிகையில் நாண்டு கொள்ளாமல் நடிக்கிறேன் நான்!

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728